புதன், 20 மே, 2015

Sethuramalingam Pannerselvam

                      சேதுராமலிங்கம் பன்னீர்செலவம், இது என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய ஒரு சுயசரிதம். சுயசரிதம் எழுத்து அளவுக்கு நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை ஒரு நாள் நானும் சாதிப்பேன் என்பதில் எனக்கு ஐயம் ஏதும்மில்லை.

                      நான் யார்..? தமிழ் என்  தாய்மொழி. இந்தியா என் தேசம். அதில் தமிழ்நாடு  என் மாநிலம். மனனர் தொண்டைமான் ஆண்ட புதுக்கோட்டை என் மாவட்டம். அறந்தாங்கி வட்டம் எருக்கலக்கோட்டை கிராமத்தில் வேணு செட்டியார் புதல்வனாகிய பன்னீர்செல்வத்திற்கும் கல்யாணிக்கும் முதல் இரண்டு மகள்களுக்கு பிறகு 1988ம் ஆண்டு டிசம்பர் 4ம் நாள்(கார்த்திகை 19) ஞாயிற்று கிழமை இரவுவில் எந்தவித ஆராவாரமும் இல்லாமல்  இப்புவியில் பிறப்பெடுத்தவன் நான்..

                    ஆம், அன்றில் இருந்து எனக்கான நாள் ஆரம்பம் ஆனது. நாளொரு மேனி பொழுதுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தேன். 1992ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் நாள் என்னை ஈன்றுடுத்த தாயின் தாய்க்கு உடல்நலம்மின்மை ஆனது. அதற்காக என் தாயானவள் அவள் தாயை கான சேலம் மாநகர்க்கு அவள் உடன் பிறந்த இருவரில் ஒருவர் அவள் தாயுடன் இருக்க மாற்றவளோடு ஆயத்தமான வேளையில் நான் அங்கு வரவே, என்னை விட்டு செல்லாதே என்று உரைக்க, சரி உடன் வா... என்னையும் அழைத்து சென்றாள். அந்நாளில்லிருந்து காலன் என் தாயை பின் தொடர்வான் அறிந்தேனோ என்னவோ அவளை விட்டு காண நேரமும் பிரியாமல் இருந்தேன். சேலத்தில் எனது பட்டியின் உயிரை உடலை விட்டு பிரித்து காலன் எடுத்து செல்ல, ஈம காரியம் முடிந்த பிறகு என் தாயும் அவள் சகோதரியும் சேலத்திலிருந்து முன்னிரவில் புறப்பட்டோம். திருச்சிராப்பள்ளி மாநகரை அடைந்த போது காலன் தன் வேலையை அங்கிருந்து தொடக்கி விட்டான் என யாரும் அறிந்திருக்கவில்லை.

                    என் தாய்க்கும் அவள் தமக்கைக்கும் உடல் ஒத்துழைக்கவில்லை அதற்க்கு மேல் செல்ல எழுந்து நடக்க முடியாத நிலை. நான் ஒன்றும் அறியாதவனாய் அமர்ந்துதிருந்தேன் அவர்கள் அருகில், கடவுளுக்கு ஒரே கவலை எங்கே தான் எழுதிய விதி மாறிவிடுமோ என்று எங்களுக்கு உதவ கடவுளால் அனுப்பப்பட்ட மனித தெய்வம் தான் திரு.அருச்சுணன் அவர்கள், அவர் மட்டும் இல்லை என்றால் அன்றே அனாதையாகி போயிருப்போம் நாங்கள்.

                      திரு.அருச்சுனன் அவர்கள் என் தாய் இருவரையும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நாங்கள் இருவரும் எனது ஊரை நோக்கி பயணப்பட்டோம், நானே என் ஊருக்கு திரு. அருச்சுணன் அவர்களை வழி நடத்தினேன். எங்கள் ஊரை அடைந்த போது எனது எனது பாட்டியின் தங்கை மகனுக்கு திருமணம் ஊரே அங்கு கூடி இருந்தது கூடவே என் சொந்தங்களும் தான், ஊரே கலங்கிவிட்டட்து எங்கள் நிலை அறிந்து. உடனே எல்லோரும் புறப்பட்டார்கள் திருச்சிராப்பள்ளி மாநகரை நோக்கி.

                    சிகிச்சை முடிந்தது வீடு திரும்பினார்கள் இருவரும் நலம் என்பது போல் தோன்றினாலும் அது அப்படியே முடிந்திருக்கும்  என்று எல்லோரும் நினைத்திருக்கையில் காலன் விளையாடினான் என் தாயிடம் கேட்டிருப்பான் போல நீயா உன் சகோதரியா என்று அவள் பிள்ளைகளை கூட கவலை படாமல் நானே என்று சொல்லி இருப்பால் போலும்.  ஆனால் விதி விளையாடியது வந்தது மீண்டும் உடல்நிலை மோசம். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதி யாரும் அறிந்திருக்கவில்லை அவள் உயிரற்ற உடல் தான் திரும்பும் என்று. ஆம் இந்த பூமியில் நல்லவர்களுக்கு இடமில்லை ஆகவே அவளும் போனால் காணாத தேசம் நோக்கி.

                    ஆறு திங்களே கடத்தது எனது தந்தை தான் சகோதரிக்காகவும் தன் பிள்ளைகளை நல் முறையில் பேணவும் தன் சகோதரியை  திரு.ஆறுமுகம் திருமதி.தனம் அவர்களின் புதல்வன் மற்றும் தன் சொந்த அத்தை மகனான திரு.சரவணன் அவர்களுக்கு கொடுத்து அவர்களின் புதல்வி திருமதி.சாந்தியை மறுமணம் செய்தார். சிற்றன்னைகென்று ஒரு இலக்கணம் இருக்கிறது அல்லவா அதற்க்கு நானும் விதி விலக்கு  அல்ல என்று நிருபித்தார். எங்கள் முன்று பேர் மீதும் துளியும் அன்பும்மில்லை பசமும்மில்லை. எங்களுக்கு எங்கள் பாட்டியும் தாத்தாவும் இருந்ததே ஆறுதல். அபோது எங்கள் அன்னையின் கூட மருத்துவமனையில் இருந்த அவர்களின் சகோதரி திருமதி.விஜயா அவர்களின் மற்றுமொரு சகோதரி தான் திருமதி.அமுதா அவர்கள் ஒருவரை மனம் புரிந்து அவர் இறந்து விடுவதால் தான் சொந்த அத்தை மகன் ஏற்கனவே மணமாகி அவர் மனைவியும் இறந்து போவதால் அவரை மணக்கிறார். முதல் மனைவிக்கு முன்று மகன் ஒரு மகள். தான் கூட பிறந்த சகோதரிக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றி இருக்கும்மோ அல்லது எங்கள் மீது உள்ள பாசமோ தெரியவில்லை தனது சகோதரியும் மூத்த மகளான வனிதாவை தானே வளக்கிறேன் என்று சொல்லி தன்னோடு வைத்துகொண்டார்.

                        மீதி நாங்கள் இரண்டு பேர் கவிதா மற்றும் நான். எனது தந்தை மிகவும் புத்திசாலி அதனால் என்னை வேறு இடத்துக்கு மாற்றினார் தான் தொழில் செய்து வரும் சேத்தியாத்தோப்புக்கு. அங்கிருந்து பலவித கனவுகளோடு புறப்பட்டேன்.தான் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிருப்பதால் என்னை விடுதியில் சேர்ப்பதாய் முடிவு. அதுவரை பாட்டியின் அன்பை மட்டுமே பார்த்து வளந்து விட்டு அங்கு எல்லாமே எனக்கு புதிதாக தோன்றியது.   அங்கிருந்து தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக என்னை வளையமாதேவி உள்ள விடுதியுடன் கூடிய வள்ளலார் உயர்நிலை பள்ளியில் சேர்த்துவிட்டார்.